தூத்துக்குடி, மார்ச் 28 –
திருச்செந்தூர் கோவில் பகுதியில் இரசாயனம் கலந்தது போல், கடல் திடீரென நிறம் மாறியதால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். திருச்செந்தூருக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கடலில் நீராடுகின்றனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் கடலில் கருஞ்சிகப்பு நிறத்தில் எண்ணெய் படலம் போன்று பரவி காணப்பட்டது.

வள்ளி குகை அருகில் இருந்து கடலில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணெய் படலமாக உள்ளது. இதனால் கடலில் ரசாயனம் கலந்துள்ளதாக பக்தர்கள் அச்சம் அடைந்துள் ளனர். அதனால் கடலில் யாரும் குளிக்கவில்லை. ஆனால் இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இது கடலில் ஏற்படும் வழக்கமான நிகழ்வுதான் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.