இம்பால் ,

மணிப்பூரில் இன்று அதிகாலை பேருந்து ஒன்று நீரோடையில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலியாகினர் . மேலும் 25 பேர் காயமடைந்தனர்.

மணிப்பூர் மாநிலம் சேனாபதி மாவட்டத்தில் உள்ள இம்பால் – திமாபூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இம்பாலை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து நீரோடையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் பலியாகினர். மேலும் காயமடைந்த 25 பேர் அசாம் ரைபிள்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் , காவலர்கள் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: