ராஜஸ்தான்:
13 வயது பள்ளி மாணவியை கடந்த இரண்டு ஆண்டுகளாக பலாத்காரம் செய்த 8 ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் பிகானெரில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த 13 வயது மாணவி ஒருவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த சிறுமியின் தந்தை மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இந்த மருத்துவ பரிசோதனையில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
இதனைத்தெடர்ந்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அந்த சிறுமி கடந்த 2 வருடமாக 8 ஆசிரியர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளது தெரிய வந்தது. இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்ததும், அதை கலைக்க மாத்திரை கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஆசிரியர்கள் 8 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.