சென்னை: நிலுவை ஓய்வூதியத்தை வழங்கக்கோரி கடந்த 10 நாட்களாக 65 ஆயிரத்திற்கும் அதிகமான ஓய்வூதியர்கள் அனைத்து பணிமனைகள் முன்பாகவும் காத்திருப்பு, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மார்ச்24) திமுக உறுப்பினர் டி.செங்குட்டுவன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
அதற்கு பதிலளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “2008 ஏப்ரல் 1க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட பங்குத் தொகையைவிட, கொடுக்க வேண்டிய தொகை அதிகமாக உள்ளது. எனவே, பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தத் தொகையை போக்குவரத்துத் துறைக்கு வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதால் இம்மாதம் 28ம் தேதி, 65 ஆயிரம் பேருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும்,” என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.