தீக்கதிர்

பெரம்பலூர் : கல்லூரி பேருந்துகள் மோதி 30 மாணவிகள் காயம்

பெரம்பலூர் ,

பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லூரி பேருந்துகள் மோதிய விபத்தில் 30 மாணவிகள் காயமடைந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் கவுல்பாளையம் அரியலூர் சாலையில் இரண்டு தனியார் கல்லூரி பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 30 மாணவிகள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.