கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே சுங்காங்கடை ஐயப்பா கல்லூரியைச் சோர்ந்த மாணவிகள் வந்த வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த தீபா, சங்கீதா,சிவரஞ்சனி,மஞ்சு ஆகிய 4 மாணவிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 8 மாணவிகள் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave A Reply