புதுதில்லி,
காவிரி படுகையில் மீத்தேன் திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழு மீண்டும் அனுமதி வழங்கி இருக்கிறது. இது தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
காவிரி டெல்டா பகுதிகளில் தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு 2013-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி மீத்தேன் எடுக்க அனுமதி அளித்தது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனங்கள் பூமியில் பயன்படுத்தப்படும். மேலும் நிலத்தடிநீர் அதிகளவில் வெளியேற்றப்படும்.இதுபோல் இன்னும் பல்வேறு காரணங்களால் காவிரி டெல்டா மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதன் காரணமாக இத்திட்டத்திற்கு எதிராக மக்கள் மற்றும் விவசாய சங்கங்களின் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு அப்போதைய முதல்வர்  ஜெயலலிதா தனியார் தனியார் நிறுவனங்கள் மீத்தேன் எடுக்க தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது மத்திய சுற்றுச்சூழல் நிபுணர்குழு மீண்டும் மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது. இது தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: