கிருஷ்ணகிரி:
கர்நாடகாவிற்கு ரேஷன் அரிசி கடத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்து லாரியை பறிமுதல் செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கர்நாடகாவிற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக குடிமைப் பொருள் வாணிப கழகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அடிப்படையாக கொண்டு தனி வட்டாட்சியர் முருகன் தலைமையில் கிருஷ்ணகிரியை அடுத்துள்ள பையன்ப்பள்ளி அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்றை சோதனை நடத்தினர். இதில் 5 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் லாரி ஓட்டுனர் ஜெய்நாயக் உள்ளிட்ட 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 5 டன் ரேசன் அரிசி நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

You must be logged in to post a comment.