புதுதில்லி, மார்ச் 21-
நாடாளுமன்றம்,சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மக்களவையில் விரைவாக நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மகளிர் திங்களன்று பேரணி நடத்தினர். பேரணி தில்லி ஹவுஸ் மண்டி பகுதியில் தொடங்கி ஜந்தர் மந்தரை அடைந்தது. பேரணியில் பங்கேற்றவர்கள் இடஒதுக்கீடு மசோதாவை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினர். பேரணியில் பங்கேற்ற திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி,கே.ரங்கராஜன் சந்தித்து போராட்டம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

Leave A Reply