கோவா, மார்ச் 21 –
கோவா மாநில சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 40 எம்எல்ஏ-க்களுமே கோடீஸ்வரர்கள்; மேலும் இவர்களில் 9 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.40 இடங்களைக் கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற சட்டப்பேர வைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதி களிலும், பாஜக 13 இடங்களிலும் வெற்றி பெற்றன. எஞ்சிய இடங்களில் சிறிய கட்சிகள், சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். இவர்களின் ஆதரவைப் பெற்று பாஜக ஆட்சி அமைத்தது. மனோகர் பாரிக்கர் முதல்வரானார்.

இந்நிலையில் கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கோடீஸ்வரர்கள் என்று தெரியவந்துள்ளது. அதாவது, ஒவ்வொரு எம்எல்ஏ-வுக்கும் குறைந்தது ரூ. 4 கோடியே 75 லட்சம் முதல், அதிகபட்சம் 10 கோடியே 90 லட்சம் வரையிலான சொத்துக்கள் இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 17 எம்.எல்.ஏ-க்களின் சொத்து மதிப்பு சராசரியாக ரூ. 12 கோடியே 17 லட்சமாகவும், பாஜகவைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏக்களின் சொத்து மதிப்பு சராசரியாக 11 கோடியே 53 லட்சமாகவும் உள்ளது. மஹாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.-க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 9 கோடியே 35 லட்சமாகவும், கோவா பார்வர்ட்கட்சி எம்.எல்.ஏ.-க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 8 கோடியே 55 லட்சமாகவும் உள்ளது.கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 93 சதவிகித எம்எல்ஏ-க்கள், அதாவது 37 எம்எல்ஏ-க்கள் கோடீஸ்வரர்களாக இருந்தனர். தற்போது 40 தொகுதிகளிலும் கோடீஸ்வரர்களே எம்எல்ஏ-க்களாக வெற்றிபெற்றுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: