சென்னை: வேலம்மள் கல்விக்குழுமம், மாணவர்களின் கல்வியறிவோடு விளையாட்டுத் துறையிலும் மேம்பட வேண்டும் என்ற உயரிய நோக்கில் பல்வேறு நாடுகளில் இருந்து பயிற்சியாளர்களை வரவழைத்து சென்னையில் சிறப்புப் பயிற்சிப்பட்டறை வகுப்புகள் துவங்கியுள்ளனர். மாணவர்களை ஊக்கப்படுத்தி தேசிய அளவில் வெற்றபெற வைக்க வேண்டும் என்பதே இந்தப் பயிற்சிப் பட்டறையின் நோக்கமாகும்.

சென்னை ஆவடி பருத்திப்பட்டில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் திங்களன்று(மார்ச்20) தொடங்கிய இந்தப் பயிற்சிப் பட்டறையில் பயிற்சியாளர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த லியோ ஹண்ட்(தடகளம்),கானர் ஜான்(கைப் பந்து), செர்பியாவின் ஆண்ட்ரிக் மிலான்(டென்னிஸ்), தென்னாப்பிரிக்காவின் அட்ரியன்ட் க்ரான்ட் டக்மோர்(கிரிக்கெட்), ஸ்பெயினின் ஆல்பர்டோ கார்லஸ்(கூடைப் பந்து) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாயையொட்டி, பள்ளி வாளகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூடைப் பந்து விளையாட்டு மைதனத்தையும் கார்லஸ் திறந்து வைத்தார்.

முதற்கட்டமாக வேலம்மாள் பள்ளி அணிக்கும் எ.வி.எம். இராஜேஸ்வரி மேல்நிலைப் பள்ளி அணிக்கும் இடையே போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற அணிக்கு சுழல் கோப்பை வழங்கப்பட்டது.

Leave A Reply