உலகின் மிக மூத்த அரசியான இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் இறந்தால் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை பல ஆண்டுகளாக அரச குடும்ப நிர்வாகத்தினர் ஒத்திகை பார்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் பிரிட்ஜ் ஈஸ் டவுன் என்ற குறிப்புச் சொல் முதல்கொண்டு, 10 நாள் இரங்கலுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் ஏறத்தாழ திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இங்கிலாந்தில் உள்ள பக்கிங்காம் அரண்மனைமுன், அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகியவற்றில் ஒட்டப்படவேண்டிய நோட்டீஸ், ஊடகங்கள் இசைக்க வேண்டிய சோக கீத பட்டியல், சில உலக டிவிக்களின் செய்தி வாசிப்பாளர்கள் கறுப்பு நிற உடை அணிவது, கால்பந்தாட்ட மைதானங்களில் இரங்கலுக்கு ஏற்பாடு செய்வது என முன்னரே திட்டமிடப்பட்டுள்ளதாம்.

இறுதிச் சடங்கின் போது அரண்மனை மணியில் தடிமனான துணியைக் கட்டி சத்தத்தை குறைத்து சோகத்தை உணரச் செய்வது, 50 லட்சம் பார்வையாளர்களுக்கான ஏற்பாடு, 10 ஆயிரம் விஐபிக்களுக்கான டிக்கெட் பிரின்ட் செய்வது, காமன் வெல்த் நாடுகளுக்கும், செய்தி நிறுவனங்களுக்கும் தகவல் அனுப்புவது என அனைத்துமே திட்டமிடப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

free wordpress themes

Leave A Reply