கேரளாவைச் சேர்ந்த 48 வயதான கத்தோலிக்க பாதிரியாரான டாமி கலத்தூர் மேத்தீவ் என்பவர் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னின் ஃபாக்னர் பகுதியில் உள்ள தேவாலயத்தில் பணிபுரிந்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை 11 மணியளவில் வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருக்கையில், மேத்தீவை நெருங்கிய 72 வயதான முதியவர் ஒருவர், தாம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாதிரியாரின் கழுத்தில் குத்தினார். பாதிரியார் மேத்தீவ் இந்தியர் என்பதால் அவர் ஒரு இந்துவாகவோ அல்லது இஸ்லாமியராகவோ தான் இருக்க வேண்டும் என்று கூறியபடி கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாதிரியார் மேத்தீவின் உடல் நிலை சீரடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

பாதிரியாரை கத்தியால் குத்திய முதியவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply