புதுதில்லி, மார்ச் 20-
மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு சிஐடியு அதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிஐடியு தலைவர் டாக்டர் கே.ஹேமலதா, பொதுச் செயலா ளர் தபன்சென் எம்.பி. ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு: மானேசர் தொழிற்பேட்டையில் உள்ள மாருதி சுசுகி தொழிற்சாலையில் 2012 இல் நிர்வாகத்தின் குண்டர்களால் தொழிற்சாலையின் பொது மேலாளர் படுகொலை செய்யப்பட்டு, அதனை அங்கு வீரியத்துடன் செயல்பட்டுவந்த சங்கங்களை நசுக்கிட நிர்வாகம் பயன்படுத்திக் கொண்டது. வன்முறை சம்பவத்திற்கு சம்பந்தமில்லாத தொழிலாளர்களை மாநில அரசும்,  காவல்துறையும், தொழிற்சாலை நிர்வாக மும் மிகவும் கேவலமான முறையில் ஆட்சி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பொய்யாகப் புனையப்பட்ட சாட்சியத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் தண்டிக்கப் பட்டுள்ளார்கள். 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். 200க்கும் மேற்பட் டோர் கடந்த நான்கரை ஆண்டு கால மாக சிறையிலேயே அடைத்து வைக்கப் பட்டிருந்தார்கள். பொய்யாகப் புனையப்பட்ட வழக்கிலிருந்து 117 பேர் விடுதலை செய்யப்பட்டி ருக்கிறார்கள். மிகவும் அருவருக்கத்தக்க முறையில் நடந்துகொண்டிருக்கும் ஹரியானா மாநில அரசின் இந்த தொழிலாளர் விரோதப் போக்கு வெற்றி பெறப் போவதில்லை.

தண்டனை குறித்து அறியப்பட்ட வுடன் குர்கான் தொழிற்பேட்டையில் வேலையிலிருந்த ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் தங்கள் மதிய உணவைப் புறக்கணித்து தன்னெழுச்சியாக தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள். மாருதி தொழிலாளர்களும், அதன் துணைப் பிரிவுகளில் உள்ள தொழி லாளர்களும் உடனடியாக ஒரு மணி நேரம் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்தனர். தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யவும், பாதிக்கப்பட்ட தொழிலாளர் களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து ஒன்று பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடவும் குர்கான் தொழிற்பேட்டையில் செயல்படும் சங்கங்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. மாநில அரசு மற்றும் மாருதி நிர்வாகத் தின் கள்ளப் பிணைப்பை சிஐடியு வன்மை யாக கண்டிக்கிறது. தண்டனைக்கு எதிராக தன்னெழுச்சியாக எதிர்ப்பினை வெளிப் படுத்திய தொழிலாளர்களை பாராட்டுகிறது. அரசாங்கம் – முதலாளிகளின் இழி செயல் களின் மூலமாக தொழிலாளர் வர்க்க இயக்கத்தைப் பணிய வைத்திட முடியாது என்பதை சிஐடியு உறுதிபட தெரிவித்துக் கொள்கிறது. மாருதி தொழிலாளர்களின் போராட்டத் திற்கும், மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக குர்கான் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கும் சிஐடியு தன் ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறது. மாருதி தொழிலாளர்கள் மேற்கொண்டு ள்ள சட்டரீதியான போராட்டம் உட்பட நீதி கோரி நடத்தும் போராட்டத்திற்கு சிஐடியுவின் அனைத்துக் கிளைகளும், இணைப்பு சங்கங்களும் தங்கள் ஒருமைப்பாட்டினை தெரிவிக்க வேண்டுமாய் சிஐடியு அறைகூவி அழைக்கிறது.

(ந.நி.)

Leave A Reply