ஹைதராபாத், மார்ச் 20-
பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் தோற்கடிக்கப்பட முடியாத சக்திகள் அல்ல என்றும், மத
வெறிக்கு எதிராக இந்தியா மீண்டும் மகத்தான வெற்றி பெறும் என்றும் ஹைதராபாத் தில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார்.
தெலுங்கானா அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், மத்திய மோடி அரசின் மதவெறி கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த சுமார் 5 மாத காலமாக தெலுங்கானா மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தம்மினேனி வீரபத்ரம் தலைமையில் மாபெரும் மக்கள் சந்திப்பு பாதயாத்திரை நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்களை நேரடியாக சந்தித்த இந்த மகாஜன பாதயாத்திரையின் நிறைவாக மார்ச் 19 ஞாயிறன்று ஹைதராபாத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற மாபெரும் செம்படை பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய கட்சியின் அரசி
யல் தலைமைக் குழு உறுப்பினரும், கேரள முதலமைச்சருமான பினராயி விஜயன், மதவெறி
யை தீவிரமாக பரப்பியதன் மூலமும், வலுவான பண பலத்தை பயன்படுத்தியதன் மூலமும் மாநிலத்தில் மத்திய அரசின் ஒட்டுமொத்த நிர்வாக எந்திரத்தை துஷ்பிரயோகம் செய்ததன்
மூலமும் தான் உத்திரப்பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது எனக் குறிப்பிட்டார். ஆனாலும் கூட 60 சவீதத்திற்கும் அதிகமான மக்கள் பாஜகவுக்கு எதிராகவே அங்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்
2014 நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டு மொத்த நாட்டிலும் வெறும் 31 சதவீத வாக்கு களே பாஜகவால் பெற முடிந்தது; சுமார் 70 சதவீத மக்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களித்தார்கள் என்றும் குறிப்பிட்ட அவர், நாட்டின் பெருவாரியான மக்கள் மதவெறிக்கு எதிராக உறுதியுடன் நிற்கிறார்கள் என்பதே இதன் பொருள் என்று குறிப்பிட்டார்.
தற்போதைய நிலையில் மதவெறியையும், நவீன தாராளமயத்தையும் ஒருசேர பின்பற்றி வரும் பாஜக அரசுக்கு எதிராக அனைத்து ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளும் ஒன்றுபட்டு போராடுவது அவசியம்என்றும் பினராயி விஜயன் கூறினார்.
பேரணியில் கட்சியின் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். இப்பேரணிக்கு பினராயி விஜயன் வரக் கூடாது என ஆர்எஸ்எஸ் கும்பல் மிரட்டல் விடுத்திருந்தது. ஆனால் அதை மீறி அவர் வந்து உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave A Reply