மேட்டுப்பாளையம் ,

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி சென்ற காரில் பெட்ரோல் டேங்க் தீடீரென தீ பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அனைவரும் பத்திரமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேட்டுப்பாளையம் கரட்டுமேடு பகுதியை சேர்ந்தவர் காஜா மொய்தீன். கோத்தகிரியில் உள்ள இவரது உறவினர் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாததால் அவரை பார்க்க மொய்தீன் மகன் சம்சுதின் உட்பட உறவினர்கள் பர்சினா, நசீர்,மெகருன்னிசா, பைரோஜா மற்றும் ரஹமத்துல்லா ஆகியோர் நேற்று மாலை மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரிக்கு  சொந்தகாரில் சென்றனர். காரை சம்சுதின் ஓட்டினார். கார் மேட்டுப்பாளையம்கோத்தகிரி சாலையில் குஞ்சப்பனை பகுதியை கடக்கும் போது எதிர்பாராத விதமாக கார் பெட்ரோல் டேங்கில் இருந்து தீ பற்றி ஏரிந்தது.

இதைக்கண்ட சம்சுதின் காரை சாலையோரத்தில் நிறுத்தினார். இதைத்தொடர்ந் காரில் இருந்த அனைவரும் இறங்கி ஓடினர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீ பரவி எரிந்தது. தீ விபத்து குறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர்  விரைந்து தீயை அணைத்தனர். இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply