இமாச்சல் பிரதேசத்தில் உள்ள பாக்லோ ராணுவ முகாமில் கடந்த 14 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா -ஓமன் கூட்டு ராணுவப் பயிற்சி நிறைவு பெற்றது. இதனை குறிக்கும் வகையில் ராணுவ அணிவகுப்புகளும் சாகசங்களும் நிகழ்த்தப்பட்டன. இந்திய ராணுவம் மற்றும் ஓமனின் ராயல் ஆர்மி படையினரும் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியின் போது ஹெலிகாப்டர்கள் மூலம் தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கைகள் ஒத்திகை செய்து காட்டப்பட்டன. இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவையும் ராணுவ ஒத்துழைப்பையும் இந்தப் பயிற்சி பலப்படுத்தியிருப்பதாக ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply