திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் அருகே உள்ள ரகுநாதபுரம் தனியார் நூற்பாலையில்,  தொழிலாளர்கள் கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுத்து ஆலைவாயில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் அருகே உள்ள ரகுநாதபுரத்தில் தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்கள் 3 ஷிப்டுகளாகப் பணியாற்றுகின்றனர். தொழிலாளர்கள் தங்களுக்கு சம்பள உயர்வு அளிக்கும்படி கேட்டு வந்தனர். ஆனால் பஞ்சாலை நிர்வாகம் சம்பளத்தை உயர்த்தாமல் இருந்தது. இந்த தொழிலாளர்கள் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் தொடர்சியாக தற்போது, சம்பள உயர்வு கேட்டு தொழிலாளர்கள்  கடந்த மார்ச் 16 ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திங்களன்று 500 க்கும் மேற்பட்டோர், கையில் பிச்சை தட்டு ஏந்தி ஆலை நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply