மதுரை:

நடிகர் தனுஷின் அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையின் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள மருதுதுவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர் கடந்த டிசம்பர் மாதம் வேலூர் நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் எங்கள் மகன் என வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என நடிகர் தனுஷ் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து கடந்த மாதம் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தனுஷ் நேரில் ஆஜரானார். அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மருத்துவ மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் டின் வைரமுத்து ராஜு தலைமையில் மருத்துவக்குழுவினர் தனுஷ்சை மருதுவ பரிசோதனை செய்தனர்.  இந்நிலையில் பரிசோதனை அறிக்கை திங்களன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் தனுஷின் உடலில் உள்ள அங்க அடையாளங்கள் அனைத்தும் லேசர் மூலம் அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனை விசாரித்த நீதிபதி சகாப் வழக்கின் விசாரணை வருகின்ற 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.  இந்த சம்பவம் திரையுலகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியிருக்கிறது.

Leave A Reply