கோவையில் திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த சேர்ந்த பாரூக் கொலை  தொடர்பாக 5 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் உக்கடம் பகுதியை  சேர்ந்த சாதம் உசேன் என்பவரும், கரும்பு கடை பகுதியை சேர்ந்த சம்சுதீன் என்பவரும் சரண் அடைந்தனர். இருவரையும் ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி செல்வக்குமார் உத்திரவிட்டார்.

கோவையில் திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த பாரூக் என்பவர் கடந்த 16 ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.  இந்த கொலை சம்பவத்தில் 6 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இந்த வழக்கு தொடர்பாக அன்ஷர்த் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை சரண் அடைந்தார். இந்நிலையில்  சதாம் உசேன் மற்றும் சம்சுதீன் ஆகிய இருவரை போலிசார் தேடி வந்தனர். மேலும்  பாரூக் கொலையில் சந்தேகதிற்கிடமான வகையில் இருந்த அவரது இரு நண்பர்களான அப்துல் முனாப் மற்றும்  அகரம் ஜிந்தா ஆகிய இருவரை போலீசார் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் போலீசார் தேடி வந்த சதாம் உசேன் என்பவர்  இன்று காலை கோவை 5 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.  இந்நிலையில் பிற்பகல் 3 மணி அளவில் சம்சூதீன் என்பவரும் அதே நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.இதனையடுத்து நீதிமன்றத்தில் சரண் அடைந்த இருவரையும் வரும் ஏப்ரல் 3 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி செல்வக்குமார் உத்திரவிட்டார்

Leave A Reply