சென்னை: சென்னை அயனம்பாக்கத்திலுள்ள வேலம்மாள் வித்தியாலயா மேல்நிலைப் பள்ளி சார்பில் மாணவர்களுக்கு மூன்று நாள் செஸ் பயிற்சிப் பட்டறை நடத்தியது. சென்னையிலுள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில் உலக சாம்பியன் விசுவநாதன் ஆனந்த் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்தார்.

இந்தப் பயிற்சியின்போது மாணவர்களுடன் உரையாற்றிய ஆனந்த்,“சதுரங்க விளையாட்டை மாணவர்கள் தினந்தோறும் விளையாடும்போது படிக்கும் திறன், சிந்திக்கும் ஆற்றல், ஆராய்ந்து அறியக்கூடிய திறமை, கணித்து ஆராய்ந்து வெற்றி பெறும் திறன்கள் மேம்படும்” என்றார்.

“சிறுவதியல் இருந்தே சதுரங்க விளையாட்டு விளையாடும் குழந்தைகளுக்கு அபார ஞாபக சக்தி, கற்றல் திறன்,கல்வியியல் மேன்மைப் பெற்று விளங்க முடியும்” என்றும் அவர் கூறினார்.
சதுரங்க விளையாட்டு விளையாடுவதால் இடது மூளையும், வலது மூளையும் மேம்படும், கூர்மை பார்வை, படைப்பாற்றல் திறனும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply