திண்டுக்கல் மாவட்டம், வனம் மற்றும் விவசாயம் சார்ந்த நிலம் அதிகம் கொண்ட பகுதியாகும். இப்பகுதிகளில் 250 பறவை இனங்கள் உள்ளன. முன்பு சிட்டுக்குருவி அதிகளவில் காணப்பட்டது. தற்போது நகர்புறங்களில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.

கிராமப்புரங்களில் மட்டும் தற்போது கணிசமான அளவு சிட்டுக்குருவிகள் காணப்படுகின்றன. நகர்புரங்களில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வீடுகள் தோறும் சிட்டுக்குருவிகள் கூடுகட்டி வசிக்கின்ற வகையில் கூடுகள் வைக்கும் முயற்சியானது உலக சிட்டுக்குருவி தினத்தில் தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திண்டுக்கல் ஆட்சியர் டாக்டர் வினய் கூறும் போது, இன்றைய உலகில் நவீன மயமாக்கலோடு நம் இயற்கையும் பாதுகாக்கின்ற கடமை நம் அனைவருக்கும் உள்ளது. மரம் வளர்ப்பது பறவை இனங்களை பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகள் நம்முடைய வருங்கால தலைமுறையினருக்கு நல்ல சூழ்நிலையை உருவாக்கித்தரும். இதற்காக  நாம் அனைவரும் முயற்சிகள் மேற்கொள்வதோடு மட்டுமல்லாது அதனை செயல்படுத்திட வேண்டும். இதன் தொடக்கமாக வனத்துறையினர் மற்றும் திண்டி மா வனம் அமைப்பினர் சிட்டுக்குருவிகளை பாதுகாக்கின்ற வகையில், நகர்ப்பகுதிகளில் உள்ள வீடுகளில் சிட்டுக்குருவிகள் தங்குவதற்கு ஏற்ப சூழ்நிலையை உருவாக்குகின்ற நடவடிக்கையாக  மண் குடுவைகளை பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

இது போன்று இயற்கையை பாதுகாக்கின்ற வழிப்புணர்வு நிகழ்வுகள் பொதுமக்களிடையே தொடர்ந்து நடைபெற வேண்டும் என திண்டுக்கல் ஆட்சியர் டாக்டர் வினய் கேட்டுக்கொண்டார்.. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர்.வெங்கடேஷ், மற்றும் திண்டி மா வன அமைப்பினர், வனத்துறை அலுவர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply