வேலூர்,-
வேலூரில் வெளிநாட்டு நிறுவன குளிர்பானங்களை கீழே ஊற்றி வணிகர்கள் போராட்டம் நடத்தினர்.

நச்சுத்தன்மை கொண்ட கோக், பெப்சி உள்ளிட்ட குளிர்பானங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என, அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வுக் கூட்டம் வேலூர் மண்டித் தெருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டச் செயலாளர் இரா.ப.ஞானவேலு தலைமை வகித்தார். வேலூர் அனைத்து வணிகர்கள் சங்கச் செயலாளர் பாபு அசோகன் வரவேற்றார். பொருளாளர் அருண் பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்பான கோக், பெப்சி உள்ளிட்ட குளிர்பானங்களை இனிமேல் வணிகர்கள் வாங்கி விற்பனை செய்யக் கூடாது. இளநீர், நுங்கு போன்ற இயற்கை பானங்களை விற்பனை செய்வது என முடிவு செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து, வெளிநாட்டு நிறுவன குளிர்பானங்களை கீழே ஊற்றி வணிகர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மண்டித் தெருவிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை ஊர்வலமாகச் சென்றனர்.அப்போது, வெளிநாட்டு நிறுவன குளிர்பானங்களுக்கு எதிரான வில்லைகள் கடைகளில் ஒட்டப்பட்டன

Leave A Reply