அமெரிக்கா ராணுவப் பயன்பாட்டுக்காக டெல்டா 4 ராக்கெட், புளோரிடாவில் உள்ள கேப் கேனவரல் விமானப்படைத் தளத்தில் இருந்து டபிள்யு ஜிஎஸ்-9 எனும் செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது.
ராணுவ வீரர்கள் தொடர்பு கொள்ளவும், அவர்களுக்கு இடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் 10 செயற்கைக்கோள்களை புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டு, அதில் 9வது செயற்கைக்கோள் தற்போது அனுப்பப்பட்டுள்ளது. இந்த வரிசையில் கடைசி செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு ஏவப்படும் என்றும், கப்பல்கள், விமானங்கள், ராணுவ முகாம்கள் போன்ற இடங்களில் உள்ள வீரர்களுடன் ராணுவத் தலைமையகம், அமெரிக்க ஜனாதிபதி மாளிகை, வெளியுறவு அமைச்சக அலுவலகம் ஆகியவை விரைவில் இணைக்கப்படும் எனவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

free wordpress themes

Leave A Reply