தஞ்சை: மதுரை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 10ஆண்டு சிறை தண்டனை விதித்து தஞ்சாவூர் மகளீர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தஞ்சாவூர் பெண் பொறியாளர் அகிலாண்டேஸ்வரியை பண மோசடி செய்ததாக, அப்போதைய தஞ்சாவூர் இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன் விசாரணைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொன்று விட்டு தற்கொலை செய்ததாக நாடகம் ஆடினார்.

இதனை சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணை செய்து வந்தனர். இது தொடர்பாக நடந்து வந்த வழக்கில் தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றம்  ஆய்வாளர் சேதுமணி மாதவனுக்கு 10ஆண்டு சிறை தண்டனை விதித்தது தீர்ப்பு அளித்துள்ளது. தற்போது சேதுமணி மாதவன் மதுரை தெப்பகுளத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply