ஈரோடு:

ஈரோடில் 50 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பயிரிட்டிருந்த வாழைகள் சூறாவளி காற்றுக்கு சேதம் அடைந்தன. இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள வேம்பத்தி ஊராட்சியில், வேம்பத்தி, தோட்டக்குடியான்பாளையம், சிந்தகவுண்டன்பாளையம், மாக்கல்புதூர், தாளக்குட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 50 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஞாயிறன்று இரவு திடீரென ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சூறாவளி காற்று வீசியது. இந்த சூறாவளி காற்றுக்கு தாக்குப் பிடிக்காத வாழைகள், அடுக்கடுக்காக முறிந்து விழுந்தது. அறுவடைக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் வாழைகள் சாய்ந்து விழுந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வந்த வருவாய்த்துறை அதிகாரிகள், முறிந்து விழுந்த வாழை மரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது வாழைக்கு விலைக்கு தண்ணீர் வாங்கி வளர்த்து வந்தோம். ஆனால் இந்த திடீர் சூராவளி எங்கள் வாழ்க்கையையே புரட்டி போட்டிருக்கிறது. இதிலிருந்து எப்படி மீள்வோம் என தெரியவில்லை. அரசு எங்களின் நிலையை உணர்ந்து உரிய நிவாரணம் அளிக்க முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

Leave A Reply