கோவை:

கோவையில் உள்ள கல்குவாரியில் இருவர் உயிரிழந்ததன் எதிரொலியாக கல்குவாரியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் சூலூரை அடுத்த பச்சபாளையத்தில் உள்ள கல்குவாரியில் இரு தொழிலாளர்கள் பணியின் போது கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தனர். இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் விதிமுறைகளை மீறி இயங்கும் இந்த கல்குவாரியை மூட வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து  உரிய துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், கல்குவாரிக்கு வழங்கப்பட்ட குத்தகை உரிமத்தை ரத்து செய்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply