புதுக்கோட்டை, மார்ச்.19-
ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடுவதாக மத்திய அரசு எழுத்துப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவேண்டுமென அறிவித்து விவசாயிகள் பேனா, நேட்டு, மை உள்ளிட்ட எழுதுபொருட்களுடன் நூதனப் போராட்டத்தை நடத்தினர். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் இயற்கை எரிவாயு எடுக்கப்போவதாக பிப்.15-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தால் தங்கள் பகுதி கடுமையாகப் பாதிக்குமெனக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த சுற்று வட்டாரப் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நெடுவாசல் மற்றும் கோட்டைக்காடு பகுதி மக்கள் தங்களது போராட்டத்தை கை விட்டிருந்தாலும் வடகாட்டில் 15-வது நாளாகவும், நல்லாண்டார் கொல்லையில் 32-வது நாளாக வும் மக்கள் ஞாயிறன்றும் போராட்டத் தில் ஈடுபட்டனர்.

வடகாட்டில் பேனா, மை, பேப்பர் உள்ளிட்ட எழுதுபொருட்களை மத்திய அரசுக்கு அளிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, பறை இசைத்தபடி, கால்நடைகளுடன் மக்கள் ஊர்வலமாக வந்து போராட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதே போல நல்லாண்டார்கொல்லையில் நடைபெற்ற போராட்டத்திலும் பெண்கள் ஒப்பாரி வைத்தும், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். சிபிஎம் கண்டனம் போராட்டம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் கூறும்போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என தமிழக முதல்வரும், விவசாயிகள் விரும்பாவிட்டால் திட்டத்தை தொடரமாட்டோம் என மத்திய அமைச்சர் பொன்.

ராதாகிருஷ்ணனும் தெரிவித்துள் ளனர். அதே நேரத்தில், தமிழக அரசு இதுகுறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றத் தயாராக இல்லை. மத்திய அரசும் எழுத்துப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவும் மறுத்து வருகிறது. விவசாயிகள் மீதான மத்திய, மாநில அரசுகளின் இத்தகைய மெத்தனப்போக்கை கட்சியின் மாவட்டக்குழு சார்பில் வன்மை யாகக் கண்டிக்கிறோம். மேலும், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் மத்திய அரசு தெளிவான ஒரு அறிக்கையை விரைந்து வெளியிட வேண்டும். மாநில அரசும் இதற்கான அழுத்தத் தைக் கொடுக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.