லக்னோ, மார்ச் 19-
உ.பி. மாநில முதல்வராக ஆர்எஸ்எஸ் பேர்வழி யோகி ஆதித்யா நாத், ஞாயிறன்று பதவியேற்றார். ஆர்எஸ்எஸ் அமைப் பைச் சேர்ந்த கேசவ் பிரசாத் மவுலியா, தினேஷ் சர்மா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்கள் மூவருமே உ.பி. மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதும், ஆர்எஸ்எஸ் அமைப்பு நேரடியாக தலையிட்டு நியமித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிபிஎம் அதிர்ச்சி
புதுதில்லி, மார்ச் 19-
உ.பி. மாநில முதல்வராக யோகி ஆதித்யா நாத் நியமிக்கப்
பட்டிருப்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிர்ச்சி
யும், கண்டனமும் தெரிவித்துள்ளது.
உ.பி. மாநில முதல்வராக யோகி ஆதித்யா நாத்தை நிய
மிப்பது என்ற அதிர்ச்சிகரமான முடிவை பாஜக எடுத்துள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பு இவரை தேர்வு செய்து தனது அரசியல் பிரிவான பாஜக மூலம் நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த
வெளிப்படையான நடவடிக்கை மாநில நலனுக்கு முற்றி
லும் தீங்கு பயப்பதாகும்.
இந்துத்துவா மதவெறியராக அறியப்பட்ட ஆதித்யா நாத், மதக் கலவரங்களை தூண்டும் வகையில் வெளிப்படை
யாக பேசியவர். அவர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர் வெளிப்படையாகவே சாதி வெறிக் கருத்துக்
களை வெளியிட்டு வந்துள்ளார்.
ஆதித்யா நாத்தை உ.பி. முதல்வராக தேர்வு செய்தி
ருப்பதன்மூலம் பிரதமர் நரேந்திரமோடி கூறி வந்த ‘வளர்ச்சியே
தங்களது முக்கிய நிகழ்ச்சிநிரல்’ என்பது மீண்டும் ஒரு முறை
அம்பலமாகிவிட்டது.
இந்த தேர்வின் மூலம் மோடி தன்னுடைய சொந்த முழக்க
மான ‘அனைவருடனும் இணக்கம், அனைவருக்கும் வளர்ச்சி’ என்பதற்கே துரோகம் இழைத்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், உ.பி.யில் உள்ள அனைத்து ஜன
நாயக, மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு சமூக ஒற்றுமையையும், அனைத்து பகுதி மக்களுக்கும் அர
சியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளையும் பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
அறைகூவல் விடுக்கிறது.

அண்மையில் நடந்த உ.பி.மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. எனினும், முதல்வரை தேர்வு செய்வதில், பெரும் இழுபறி ஏற்பட்டது. இதனிடையே, பாஜக வெற்றி பெற்ற உத்தரகண்ட் மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த திரிவேந்திரசிங் ராவத் பதவியேற்றார். இவர் 1979 ஆம் ஆண்டு முதல் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்து பணியாற்றியவர். 2002 ஆம் ஆண்டு இவர் பாஜகவின் செயலாளராக நியமிக்கப்படும் வரை ஆர்எஸ்எஸ் அமைப்பில் பணியாற்றி வந்தார்.

இதனிடையில், ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த யோகி ஆதித்யா நாத், உ.பி. மாநில முதல்வராக சனிக்கிழமையன்று தேர்வுசெய்யப்பட்டார். அதே அமைப்பைச் சேர்ந்த கேசவ் பிரசாத் மவுலியா, தினேஷ் சர்மா ஆகியோர் துணை முதல்வர்களாக தேர்வு செய்யப்பட்டனர். ஆதித்யா நாத் கேட்டுக் கொண்டதற்கேற்ப இருவரும் துணை முதல்வர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய அமைச்சர் வெங் கய்யா நாயுடு கூறியுள்ளார்.பதவியேற்பு விழா லக்னோவில் திறந்தவெளி மைதானத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோசி, அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெங்கய்யா நாயுடு, உமாபாரதி உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

ஆதித்யா நாத் அமைச்சரவையில் 47 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். சட்டமன்ற தேர்தலில் ஒரு முஸ்லிமை கூட வேட்பாளராக பாஜக நிறுத்தவில்லை. இது குறித்து கேட்டதற்கு தகுதியான வேட்பாளர்கள் இல்லை என்று கூறி சமாளித்தனர். இந்நிலையில், கிரிக்கெட் வீரரான மோசின் ரஸா என்பவர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். முதல்வர் தேர்வில் ஆர்எஸ்எஸ் தலையிடவில்லை என்று அந்த அமைப்பின் இணைப் பொதுச் செயலாளர் பாகையா கூறியுள்ளார். முதல்வர்கள் தேர்வுஎன்பது அரசியல் சார்ந்த முடிவு என்றும், இந்த விஷயத்தில் பாஜகவுக்கு எந்த நெருக்கடியும் கொடுக்க வில்லை என்றும் அவர் கூறினார். உ.பி. மாநில முதல்வர் பதவிக்கு மாநில பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மவுலியா, மத்திய அமைச்சர் மனோஜ் சின்கா ஆகியோரது பெயர்கள் அடிபட்டு வந்தன. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் தலையீட்டின் காரணமாகவே சட்டமன்றத்தில் போட்டியிடாத மக்களவைத் தொகுதி உறுப்பினரான ஆதித்யாநாத் முதல்வராக நியமிக்கப் பட்டுள்ளார். இது ஆர்எஸ்எஸ் வேலைதான் என்று அரசியல் விமர்சகர்கள் அழுத்தமாக கூறுகின்றனர்.

Leave A Reply