புதுக்கோட்டை, மார்ச்.18-
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக ஒரு மாதத்திற்கும் மேலாக போராடியும் விவசாயிகளின் உணர்வுகளை மதிக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து விவ
சாயிகள் சனிக்கிழமையன்று அகதி களாக ஊரை விட்டு வெளியேறும் போராட்டத்தை நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த மாதம் 15-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு உள்ளிட்ட பல்வேறு
கிராம மக்கள் தொடர் போராட்டங் களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கடந்த 9 ம் தேதி நெடுவாசலில் நடைபெற்ற போராட்ட
த்தில் மத்திய அமைச்சர் மார்ச் 15, 16 தேதிகளில் மத்திய பெட்ரோ லியத்துறை அமைச்சரிடம் உங்களை அழைத்து, உங்கள் கோரிக்கை களை எடுத்துரைக்க நடவடிக்கை எடுக்
கிறேன். அதுவரை போராட்டத்தை கைவிடுங்கள் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். இதனைத் தொடர்ந்து நெடுவாசல் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர். ஆனால், இதுநாள் வரை போரா ட்டக்காரர்களை மத்திய அமைச்சர் அழைத்துச் செல்லவில்லை. அதே நேரத்தில் மத்திய அரசு திட்டத்தை
கைவிடுவதாக உறுதியாக அறிவிக்கும் வரை எங்கள் போராட்டம் தொட
ரும் எனத் தெரிவித்து வடகாடு மற்றும் நல்லாண்டார் கொல்லையில் போராட்டம் நடை பெற்று வருகிறது.
வடகாட்டில் 14-வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் விவ சாயிகள் கறுப்புக்கொடிகளோடு, தங்கள் பகுதிகளில் விளைந்த விவசாய பொருட்களை கைகளில் ஏந்தியும், தாங்கள் வளர்த்து வந்த ஆடு, மாடுகளை அழைத்துக்கொண்டும், குடும்பத்திற்கு தேவையான பண்டம், பாத்திரங்களோடு கிராமத்தை விட்டு அகதிகளாக செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத் திடலுக்கு வந்த அவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத் திற்கு எதிராக பெண்கள் ஒப்பாரி வைத்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
பெண்கள் பிச்சை எடுத்து போராட்டம்
நல்லாண்டார்கொல்லையில் 31வது நாளாக ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக குழாய் அமைக்கப் ப்பட்டுள்ள இடத்தில் பெண்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கடந்த 31 நாட்களாக போராடி வரும் எங்களது குரல் மத்திய, மாநில அரசுகளுக்கு கேட்கவில்லையா? நாங்கள் பிச்சையெடுத்து அலைவது அரசின் செவிகளில் விழவில்லையா? எங்களை ஏன் மத்திய, மாநில அரசுகள் இப்படி கொடுமைபடுத்தி வருகின்றன எனக் கேள்விகளை எழுப்பினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.