இராமநாதபுரம்
இராமநாதபுரம் அருகே வாகனம் மோதியதில் 50 ஆடுகளும் ஆடு மேய்க்கச் சென்றவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இராமநாதபுரம் திருவாடானை செலுகை கிராமம் அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் மீது மோதியது. இந்த விபத்தில் 50 ஆடுகள் உயிரிழந்தன. மேலும், ஆடுகளை மேய்க்க சென்ற ஆரம்பக் கோட்டை கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரும் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Leave A Reply