சென்னை, மார்ச் 18-
சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மார்க்சி
ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ள ஆர்.லோக
நாதன், மக்களுக்கான போராட்டத்தில் முன் நிற்பவர் ஆவார்.
இவர் மிகவும் ஏழ்மையான மீனவர் குடும்பத்தில் பிறந்தவர். இந்திய ஜன
நாயக வாலிபர் சங்கத்தில் பணியாற்றி 1996ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய அத்தனை போராட்டங்களிலும் பங்கேற்றவர். ஆர்.கே.நகர் பகுதியில் அடிப்படை வசதி கோரி தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டங்களில் தலைமையேற்று முன்னின்று நடத்தியவர். இத்தொகுதி மக்கள் மத்தியில் மிகவும் அறிமுகமானவர்.
39 வயதான லோகநாதன், கட்சியின் முழு நேர ஊழியராக பணியாற்றி வருகிறார். 10ஆம் வகுப்பு படித்துள்ள இவர், தற்போது கட்சியின் ஆர்.கே.நகர் பகுதிக்குழு செயலாளரா
கவும் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், சென்னை -செங்கை மீன் பிடித் தொழிற்சங்க பொதுச் செயலாளராகவும், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளராகவும் செயலாற்றி வருகிறார்.
இவரின் தந்தை கே.ராஜவேல், தாயார் தனலெட்சுமி, மனைவி சசிரேகா. தேவந்தி (வயது 13) என்ற பெண் குழந்தை உள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.