கரூர்: கரூரில் டாஸ்மாக் மேற்கூறையை பிரித்து உள்ளே திருடச் சென்றவர் மது அருந்திவிட்டு போதையில் கடை அருகே  உறங்கிய நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.

கரூரில் தண்ணீர்பந்தல் பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையில் வியாழனன்று நள்ளிரவு மர்மநபர் ஒருவர் மேற்கூறையை பிரித்து உள்ளே சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்த மது பாட்டில்களை எடுத்துவந்து கடையின் அருகே குடித்துவிட்டு போதை தலைக்கேறியதால் அங்கேயே அவர் உறங்கியுள்ளார். இந்நிலையில் வெள்ளியன்று காலை டாஸ்மாக் ஊழியர்கள் வழக்கம்போல் கடையை திறந்தபோது மேற்கூறை பிரித்து பாட்டில்கள் சிதறிக்கிடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கடையின் அருகே மதுபோதையில் உறங்கிய நபரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர் மேற்கூறையை பிரித்து மது அருந்தியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

divi theme free download nulled

Leave A Reply