சனா ,

ஏமன் நாட்டின் செங்கடல் பகுதியில் கப்பலில் சென்று கொண்டிருந்த சோமாலியா அகதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

ஏமன் நாட்டின் செங்கடல் வழியாக சூடான் நாட்டிற்கு சென்று கொண்டிருந்த சோமாலியா அகதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 33 பேர் பலியாகினர். மேலும் 29 பேர் காயமடைந்தனர். 80 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என சர்வதேச செஞ்சிலுவைச் குழு அறிவித்துள்ளது. இந்த சம்பவத்துக்கு எந்த அமைப்புகளும் பொறுப்பேற்காததால் இதற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Leave A Reply