திருப்பூர்: திருப்பூரில் உள்ள அவினாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நோயாளிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்த்பாபு. இவர் திருப்பூர் மாவட்டம் ஆயிக்கவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள பனியன் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஆனந்த்பாபு வியாழனன்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அவினாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளியன்று மருத்துவமனையில் உள்ள அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply