கோவை,
கோவையில் திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த பாரூக் என்பவர் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் பாரூக். உக்கடம் பழைய மார்க்கெட்டில் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர் திராவிட விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர். தொடர்ந்து மதமூடநம்பிக்கைகள் குறித்து எழுதியும் பேசியும் வந்தார். இந்நிலையில் நேற்றிரவு 11.30 மணி  அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த பாரூகை 4 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியது. இதில் இரத்த வெள்ளத்தில் மிதந்த பாரூக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையின்ர்  பாரூக்கின் உடலை பிரேதப்பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மத காரணங்களுக்காக கொலை நடந்து இருக்கலாம் என்ற  கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படுகொலை செய்யப்பட்ட பாரூக் கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மரணத்தின் போது நடந்த வன்முறையை தடுக்காத காவல்துறையை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடி விடுதலை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.