வேலூர்,
இனி வரும் காலங்களில் அனுமதி வழங்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டும் அதை மீறி தனியார் பொருட்காட்சி நிறுவனம் கோட்டை மைதானத்தில் அரங்கங் கள் அமைத்து வருவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் கோட்டை மைதானத்தில் ஒவ்வொரு ஆண்டும் தனியார் நிறுவனங்களும், அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையும் பொருட்காட்சிகளை நடத்திவரு கின்றன. இதற்கான அனுமதி மாவட்ட ஆட்சியர், செய்தி மக் கள் தொடர்புத் துறை, காவல்துறை, தீயணைப் புத்துறை ஆகியோரால் வழங்கப்பட்டு, அதன் பின் னர் தொல்லியல் துறையிடம் அதற்கான கட்டணத்தை செலுத்தி உரிய அனுமதி யுடன் பொருட்காட்சிகள் நடத்தப்படுகின் றன.இந்நிலையில் கடந்த ஆண்டு கோட்டை மைதானத் தில் தனியார் நிறுவனம் ஒன்று பொழுது போக்கு அம்சங்க ளுடன் பொருட்காட்சி நடத்தியது. அப்போது இவர்கள் முன் அனுமதி பெறாமல் 2 நாட்கள் கூடுதலாக பொருட்காட்சி நடத்தியதாக தெரிகிறது.

இதைக் குறிப்பிட்டு இனி வருங்காலங்களில் அந்நிறுவனம் வேலூர் கோட்டை மைதானத்தில் பொருட் காட்சி நடத்தக்கூடாது என்று மாவட்ட ஆட்சியரின் பரிந் துரையை ஏற்று செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அரசு இணைச் செயலாளர் கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உத்தர விட்டார்.இந்த உத்தரவுக் கடிதம் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தடைவிதிக்கப்பட்ட குறிப்பிட்டதனியார் பொருட் காட்சி நிறுவனம் வேலூர் கோட்டை மைதானத்தில் கடந்த 2 நாட்க ளாக பொருட்காட்சி அரங்கங்கள் அமைக்கும் பணியை தீவிரமாக செய்து வருகி றது.இது குறித்து காவல் துறை அதிகாரிகள் தரப் பில் கேட்டபோது, ‘

அவர்கள் காவல் துறையில் அனுமதி பெறவில்லை. அதோடு அவர்களுக்கு அனுமதி வழங் கக் கூடாது என்று தொல்லி யல் துறைக்கும் தெரிவித்து விட்டோம்’ என்றனர்.
மாவட்ட ஆட்சியர் ராமனிடம் கேட்ட போது, ‘அவர்களுக்கு இனி அனுமதி வழங்கக்கூடாது என்ற கடிதம் இங்கிருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பேரில்தான் அந்த உத்தரவை அரசு பிறப்பித்தது.இப்போது மீண்டும் அவர்கள் பொருட்காட்சி நடத்த சென்னையில் அணுகியிருப்பதாகக் தெரிகிறது. அதை வைத்து அனு மதிவாங்குவதற்காக விண்ணப்பித்தனர். அது சென்னை இயக்குநரகத்துக்கு மேல்நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதை வைத்து அவர்கள் அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பணிகளைத் தொடங்கியிருக்கிறார்களா? என்பது தெரியவில்லை. அது குறித்து விசாரிக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

Leave A Reply