தூத்துக்குடி: தூத்துக்குடியில் மீனவர் வலையில் சிக்கிய அரிய ஸ்பேனர் நண்டை பொது மக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் வினோத். இவர் மீன்களை பிடித்து மொத்தமாக கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்யும் தொழிலை செய்து வருகின்றார். இந்நிலையில் வினோத் வழக்கம்போல் கடந்த இருதினங்களுக்கு முன்பு மீன்களை பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளார். அப்போது இவரது வலையில் ஆரஞ்சு நிற நண்டு கிடைத்ததுள்ளது. ஆமை போன்ற வடிவம் கொண்ட இந்த அரியவகை நண்டு ஆபிரிக்கா மொரீசியஸ் மற்றும் அந்தமான் கடற்பகுதிகளில் வாழும் ஸ்பேனர் நண்டு என கூறப்படுகின்றது. இந்த நண்டு சுமார் 50 மீட்டர் ஆழ கடல்பகுதிக்குள் வாழும் இந்த நண்டு ஆஸ்திரேலியா உட்பட பல வெளிநாடுகளில் உணவிற்காக பயன்படுத்தப்படு வருவதாகவும் கூறப்படுகின்றது. இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொது மக்கள் அரிய வகை ஸ்பேனர் நண்டை ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

Leave A Reply