மதுரை: மதுரையில் சாவடியின் மீது மணல் ஏற்றி வந்த லாரி மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஒத்தப்பட்டி கிராமத்தில் மணல் இறக்கி விட்டு லாரி ஒன்று உசிலம்பட்டி நோக்கி சென்றுகொண்டிருந்தது. இந்த லாரியை போஸ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் லாரி வி.பெருமாள்பட்டியை அடைந்த போது ஒர் வளைவில் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள சாவடியில் ஒன்றில் மோதியது. இதில் அங்கு அமர்ந்திருந்த மாரி, வேல்முருகன், சின்னத்தேவன், சின்னக்காளை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த சுந்தரம் என்பவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநர் போஸ்சை கைது செய்துள்ளனர்.

Leave A Reply