புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்த விழுந்த விபத்தில் 32 மாணவ-மாணவியர்கள் காயமடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவரங்குளம், இலங்கை அகதிகள் முகாம், கத்தக்குறிச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளி வாகனம் ஒன்று புதனன்று சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் திருக்கட்டளை என்ற இடத்தில் பள்ளி வாகனம் வந்த போது எதிரே லாரி ஒன்று வேகமாக வந்ததாக கூறப்படுகின்றது. இதில் லாரி மீது மோதாமல் இருக்க வேன் ஓட்டுநர் வாகனத்தை சாலையின் ஓரம் திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வாகனம் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 32 பள்ளி மாணவ-மாணவியர்கள் படுகாயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் பள்ளி குழந்தைகளை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவத் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply