நெல்லை: நெல்லையில் பன்றிக்காய்ச்சலுக்கு இது வரை 5பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த மரிய கிரேசி என்ற பெண் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்ததை அடுத்து நெல்லையில் மட்டும் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்தது. மேலும் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் உருவாக்கப்பட்டுள்ள பிரத்தியேக வார்டில் தற்போது 6 சிறுவர்கள் உட்பட 9 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருன்றனர். இந்த நோய் அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனைகளில் யாரேனும் உள்ளார்களா என்றும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் வார்டில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், நோயாளிகளின் உறவினர்களுக்கும் பன்றி காய்ச்சல் தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருவதாகவும் சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், காலம் தாழ்த்தாமல் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுமாறு சுகாதராதுறை அறிவுறுத்தியுள்ளது

Leave A Reply