பெங்களூரு ,

தமிழகத்தில் இயங்கி வரும் அம்மா உணவகம் போல் கர்நாடகாவில் நம்ம உணவகம் கொண்டுவரப்பட உள்ளதாக அம்மாநிலம் முதல்வர் சித்தத்தையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்திற்கான பட்ஜெட்டை இன்று அம்மாநிலம் முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களை போல் கர்நாடகாவில் நம்ம உணவகங்கள் கொண்டு வரப்பட உள்ளது. இவற்றில் சிற்றுண்டிகள் ரூ.5 க்கும், சாப்பாடு ரூ.10 க்கும் விற்பனை செய்யப்படும். பெங்களூருவில் மட்டும் 198 உணவகங்கள் திறக்கப்பட உள்ளன என தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.