நீலகிரி: நீலகிரியில் நிலவி வரும் கடும் வறட்சியால், கடந்த 45 நாட்களில் 11 காட்டு யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம், சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால், கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு விட்டன. மேலும் வன விலங்கள் தீவனம் இன்றியும், குடிநீர் கிடைக்காமலும் தவித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 45 நாட்களில் மட்டும் நீலகிரி  மாவட்டத்தில் 11 காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. கூடலூரில் 3 காட்டு யானைகளும், முதுமலை புலிகள் காப்பகத்தில் 4 காட்டு யானைகளும், சிங்காரா மற்றும் தென்குமராடா வனப்பகுதியில் 4 காட்டு யானைகளும்  உயிரிழந்துள்ளன.
இறந்த 11 காட்டு யானைகளின் உடல்கள், பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் உடற்கூறு பாகங்கள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் கடந்த ஒன்றரை மாதத்தில் 11 காட்டு யானைகள் இறந்துள்ள சம்பவம், சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு  உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply