நாகப்பட்டினம், மார்ச் 15-
கடந்த 05-01-17 முதல் 04-03-17 வரையிலான காலத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 85 மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, இலங்கைக் கடற்படையின ரால் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களுள் 77 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு, இந்தியக் கடல் எல்லையில் இந்தியக் கடற்படையினரிடம் தமிழக மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். எஞ்சியுள்ள 8 மீனவர்கள் இன்னும் விடுவிக்கப்படாமல், இலங்கைச் சிறையில் உள்ளனர். இவர்கள் மட்டும் விடுவிக்கப்படாததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் 9 பேர், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 30 பேர், இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 38 பேர் என மொத் தம் 77 மீனவர்கள், தமிழக கடலோரக் காவற்படைக் கப்பலில் காரைக்கால் தனியார் துறைமுகம் வந்தடைந்தனர். அவர்களை மீன் வளத்துறை, நிதி மற்றும் பணியாளர் நிர்வாகச் சீர் திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நாகப்பட்டினம் ஆட்சியர் சு.பழனிச்சாமி, மீன்வளத் துறை ஆணையர் பீலாராஜேஷ் உள்ளிட்டோர் வரவேற்று அவர்களுக்கு உணவு, உடைகள் வழங்கி அரசின் செலவில் மீனவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மீன் வளத்துறை இணைஇயக்குநர் அமல் சேவியர், உதவி இயக்குநர்கள் சுப்பிரமணியன், ரவிச்சந்திரன், கதி ரேசன், கொளஞ்சிநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பவுன்ராஜ் (பூம்புகார்), பி.வி.பாரதி (சீர்காழி), எம்.தமீமுன்அன்சாரி (நாகை) ஆகியோரும் மீனவப்பஞ்சாயத்தார்கள், அரசு அலுவலர்கள், கடற்படை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply