நாமக்கல்: ராசிபுரம் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பியின் மீது உரசியதில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள வைக்கோலை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரி ராசிபுரம் அருகே உள்ள பூசாரிபாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த பகுதியில் தாழ்வாக இருந்த மின்கம்பியின் மீது எதிர்பாராதவிதமாக உரசியுள்ளது. உடனே லாரியில் இருந்த வைக்கோலில் தீப்பிடித்து எரிய துவங்கியது.

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட லாரி ஓட்டுநர் உடனடியாக லாரியில் இருந்து இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர். இந்த விபத்தில் லாரியில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைக்கோல் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply