சென்னை: மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாயன்று (மார்ச் 14) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பொதுச் செயலாளர் து.ரவிக்குமார். துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு, ஒழுங்கு நடவடிக்கைக் குழு செயலாளர் தேவராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் கூறியது வருமாறு:
சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சந்தேகத்திற்கு உரிய முறையில் மரணமாகி இருப்பது அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பல்கலைக் கழகங்களில் உள்ள கல்விச்சூழல் , நிர்வாகச்சூழல் சரியானதாக இல்லை. இதுதான் ரோஹித்வெமுலாவை தற்கொலைக்கு கொண்டு சென்றது.
திருப்பூரை சேர்ந்த சரவணன் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் தற்கொலை என்றார்கள். பிறகு படுகொலை என்றார்கள். ஆகவே, ரோஹித் வெமுலா பெயரில் ஒரு சட்டம் கொண்டு வந்து பல்கலைக் கழகங்களின் சூழலை மாற்ற வேண்டும். ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த
மாணவர்கள் உயர்கல்விக்கு வரும் போது அவர் களை ஜனநாயகப்பூர்வமாக அணுகும் சூழலை ஏற்படுத்த வேண்டும். மாணவர் முத்துகிருஷ்ணன் சந்தேகத்திற்கு உரிய முறையில் இறந்திருப்பது குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும். அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. வறட்சி காலத்தில் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய பொதுவிநியோக முறை சீர்குலைந்துள் ளது. பருப்பு வகைகள், எண்ணெய் போன்றவை முறையாக விநியோகம் செய்யப்படவில்லை. அரிசிக்கு பதிலாக கோதுமை தருகிறார்கள். குடிநீர் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. 5 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்திருந்தால் நிவாரணம் கிடைக் காத நிலை உள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும். ரேசன் கடைகளில் முறையாக பொருட்களை வழங்க வேண்டும்.
வறட்சியால் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் முதல
மைச்சராக இருந்தபோதும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கிறபோதும் 17 பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதில் இருவருக்கும் வித்தியாசமில்லை. வறட்சியால் இறந்த விவசாயிகளின் அனைத்து குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் குறித்து மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் விவாதித்துக் கொண்டு இருக்கிறோம். மீண்டும் கலந்து பேச உள்ளோம். அதன்முடிவுகளை பின்னர் அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ஜி.ராமகிருஷ்ணன், உத்தரப்பிரதேசத்தில்
பாஜக வெற்றி பெற்றிருப்பது இந்திய மதச்சார்பின்மைக்கு ஏற்பட்டுள்ள சவாலாகும். சாதி, வகுப்புவாத அடிப்படையில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த வகுப்புவாதத்தை திர்க்கக்கூடிய வகையில் ஒரு வலுவான இயக்கத்திற்கு திட்டமிட்டுள்ளோம். உ.பி.தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் களில் ஒருவர் கூட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. இதுகுறித்தெல்லாம் விவாதிக்க வேண்டி உள்ளது. பாஜக கூறும் புதிய இந்தியா நாம் ஏற்றுக் கொள்ள முடியாத இந்தியா என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.