கோவை: கோவை அருகே வீட்டுக்குள் புகுந்த குட்டி யானை, வெளியே வரமுடியாமல் தவித்ததை தொடர்ந்து வனத்துறையினர் மயக்க மருந்து செலுத்தி மீட்டனர்.
ஆணைகட்டி சாலையில் அமைந்துள்ள மாங்கரை பகுதி குடியிருப்புகளுக்குள், கடந்த ஒரு மாத காலமாக 3 வயது மதிக்கத்தக்க குட்டி ஆண் யானை வாயில் காயம் ஏற்பட்டு, தன் தாயுடன் சுற்றிக் கொண்டிருந்தது. இதில் தாய் யானை வனப்பகுதிக்குள் விரட்டப்பட்ட நிலையில், குட்டியான வனத்துறையினருக்கு சொந்தமான வீட்டுக்குள் புகுந்து வெளியே வரமுடியாமல் சிக்கிக்கொண்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கால்நடை மருத்துவர் மனோகரன் மயக்க ஊசி செலுத்தி பாதி மயக்க நிலையில், யானையின் கால் மற்றும் கழுத்தில் கயிறு கட்டி பொதுமக்கள் உதவியுடன் மீட்டு சாடிவயல் யானைகள் முகாமுக்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: