தில்லி ,

கோவா சட்டமன்றத்தில் வியாழனன்று வாக்கெடுப்பு நடந்த வேண்டும் என்று  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் , பாஜக 13 தொகுதிகளிலும் வெற்று பெற்றது.  இதன் மூலம் அங்கு எந்த ஒரு கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. மேலும் அதிக இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் முதல் பெரும் கட்சியாக தனது இருப்பை தக்கவைத்திருக்கிறது. ஆனால் ஆட்சி அமைக்க மொத்தம் 21 இடங்கள் தேவை .  அதன் படி தேர்தலில் அதிக இடங்களை பிடித்த முதல் கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்பதுதான் மரபு. ஆனால் தேர்தல் முடிவு வெளியானது முதல் பாஜக பல்வேறு கட்சிகளை விலைபேசி வாங்கும் நிலைக்கு சென்றது.

அந்த குதிரை பேரத்தில் வெற்றி பெற்று ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் நிலைக்கு பாஜக சென்றிருக்கிறது. அதன் ஒருபகுதியாக பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த மனோகர்பாரிக்கர் தனது பதவியை ராஜனாமா செய்து, கோவா மாநில முதல்வர் பதவிக்கு பாஜகவால் முன்மொழியப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக தனது ஆதரவு எம்எல்ஏக்களின் கடிதத்தை ஆளுநர் மிருதுளா சின்ஹாவை சந்தித்து அளித்திருக்கிறார். இதனையடுத்து ஆளுநர் காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அழைப்பதற்கு மாறாக பாஜகவை ஆட்சியமைக்க அழைத்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில்  காங்கிரஸ் தனது மனுவில் பாஜக தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுநர் மாளிகையின் முடிவின் மீது செல்வாக்குச் செலுத்தி, மக்கள் தீர்ப்பை தோற்கடித்து அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கிறது என்று தன் மனுவில் புகார் கூறியிருந்தது. ‘தேர்தல் முடிவுகளின் படி காங்கிரஸ் கட்சியே ஒரே தனிப்பெரும் கட்சியாக வென்றுள்ளது, இந்நிலையில் மத்திய அரசு மற்றும் ஆளுநரின் செயல்பாடுகள் ஜனநாயகப் படுகொலை’ என்று கூறி மனோக பாரிக்கர் பதவியேற்பதை தடை செய்ய வேண்டும் என்று கோரி மனு செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனோகர் பாரிக்கர் பதவியேற்க அனுமதியளித்ததோடு, மார்ச் 16 ( வியாழனன்று) 11 மணிக்கு சட்டப்பேரவை கூட வேண்டும்,அன்றைய தினத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்ச்சி மட்டுமே நடைபெற வேண்டும். மேலும், தேர்தல் ஆணையம் கோரும் அனைத்து முன் நடைமுறைகளும் மார்ச் 15-ம் தேதிக்குள் நிறைவடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.