மன்னார்குடி

அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஊரக வளர்ச்சித்துறையினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை இன்று துவங்கியிருக்கின்றனர்.

ஏற்கனவே சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட ஊரக வளர்ச்சி துறை ஊழியர்களின் நலன் சார்ந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வேலை நிறுத்தத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், உதவி இயக்குநர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் ஊழியர்கள் அதிகாரிகள் பணிக்கு வராததால் அலுவகம் வெறிச்சோடி கிடந்தன.

Leave A Reply

%d bloggers like this: