வாஷிங்டன்: பலத்த காற்று வீசியதன் காரணமாக ஃபால்கன் 9 ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் திட்டத்தை அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தள்ளி வைத்துள்ளது.

வணிக ரீதியான தகவல் தொடர்பு செயற்கை கோள் எக்கோ ஸ்டார் -23 ஐ சுமந்து செல்லும் ஃபால்கன் 9 ராக்கெட்டை செவ்வாயன்று விண்ணில் ஏவ கலிஃபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால் ராக்கெட்டை ஏவும் நேரத்தில் பலத்த காற்று வீசியதால் திட்டம் கைவிடப்பட்டதாக அந்த நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இருதினங்களுக்குள் ஃபால்கன் 9 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்றும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் என்பது அமெரிக்காவின் விண்வெளி சார் உற்பத்தியாளர் மற்றும் விண்வெளி போக்குவரத்து சேவையை வழங்கும் நிறுவனம் ஆகும்.

Leave A Reply

%d bloggers like this: